தூக்கம் கலைந்து எழுந்து நீ குளிக்க கிளம்பும் போது உன்னை தடுப்பதே பெரும் போராட்டமாக ஆக போகிறது எனக்கு .........
எழுந்த உடன் குளித்தே ஆக வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறாய்
நீ ..........?
ஒரு ஒரு நாளும் நீ தூங்கி எழும் போதும் ......நீ தூக்கம் கலைந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணம் .....பிறந்த குழந்தை தவழ்ந்து ,எழுந்து,நடக்கிற பருவங்களாக தோன்றுகிறதடி எனக்கு!
நீ சீக்கிரம் குளிக்க போய் விட்டால் அந்த அழகெல்லாம் தண்ணிரில் கரைந்து விடாதா..?
தூங்கி எழுந்த உன் முகத்தை சுற்றி இது புதிய முகமோ ?என்ற ஆச்சர்ய சிறகுகளோடு பறக்கும் உன் முடிகளின் அந்த அழகை பாரடி ...........! நீ குளித்து விட்டால் அந்த அப்பாவி முடிகளின் சிறகுகள் ஈரமாகி ,அவை பறக்க முடியாமல் தவிக்காதா......?????
நீ குளித்து முடித்து வேறு உடை உடுத்தி நம் வீட்டை வளைய வரும் போது இருக்கும் அழகு வேறு அழகடி....அதற்காக இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால் ..........சொர்க்கலோக ரம்பை,ஊர்வசி எல்லாம் என்னை திட்டுவார்களடி........"ஹய்யோ ....இவனுக்கு காதலிக்க தெரியவில்லை " என தலையில் அடித்து கொள்வார்கள் ....இந்த ஏச்சும்,பேச்சும் எனக்கு தேவையா.....?????????
போதும் போதும்......... இந்த கசங்கிய ஆடையை மாத்தலாமா? என்று சலிப்புடன் நீ என்னை கேட்பாய்.....அதற்கும் நான் விட மாட்டேனடி .பின்னே இரவு போட்ட இஸ்திரிடி அந்த கசங்கல்கள்..........!!!
ஐயோ எனக்கு மயக்கமே வருகிறது...! என போலியாக சொல்வாய்.....
உன்னை மயக்க எனக்கு தினமும் அரை மணி நேரம் தேவை படுகிறதடி........ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகு சோம்பலில் அரை நொடியில் என்னை மயக்கி விடுகிறாய்..
ஹ்ம்ம்.....இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு? ஆசை அறுபது நாள்....மோகம் முப்பது நாள் தானே !?... என்கிறாய் அடிக்கடி.....
அடிப்பாவி ......நான் உன் மீது வைத்திருப்பது ஆசையா.....?மோகமா....?அதையும் தாண்டி
காதலடி ..........வானத்து தேவதைகளே ....இவளிடம் வந்து கூறுங்களேன்.... "காதல் என்பது காலத்தை வென்றது" என்று ...........

No comments:
Post a Comment